கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் பலி: காப்பாற்ற சென்ற இருவரும் உயிரிழந்த சோகம்

அரியானாவில் கழிவுநீர்த்தொட்டியில் தவறிவிழுந்து பலியான நிலையில் காப்பாற்ற சென்ற இருவரும் உயிரிழந்துள்ளனர்.
கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் பலி: காப்பாற்ற சென்ற இருவரும் உயிரிழந்த சோகம்
Published on

நுஹ்,

அரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் எட்டு வயது சிறுவன் உட்பட 3 பேர் கழிவுநீர் தொட்டியில் சிக்கி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று முன் தினம் மாவட்டத்தின் பிச்சோர் கிராமத்தில் நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இக்கிராமத்தில் வசிக்கும் தினு என்பவரது வீட்டின் வெளியே 20 அடி ஆழத்தில் கழிவுநீர் தொட்டி கட்டப்பட்டது.

தொட்டியானது ஒரு கற்களால் ஆன ஒற்றை பலகையால் மூடப்பட்டிருந்தது. நேற்று முன் தினம் தினுவின் எட்டு வயது பேரன் ஆரிஜ் அந்த தொட்டியின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக தொட்டி மூடப்பட்டிருந்த பகுதி உடைந்ததால், சிறுவன் தொட்டியினுள் விழுந்தான்.

இதையடுத்து சிறுவனை காப்பாற்றுவதற்காக சிறுவனின் தந்தை சிராஜுவும், 30, அவரது சித்தப்பா சலாமுவும், 35, தொட்டிக்குள் இறங்கினர். ஆனால் யாரும் வெளியே வரவில்லை. இதனால் அவர்களது குடும்பத்தினர் சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு வந்த கிராமத்தினர், மூவரது உடல்களையும் மீட்டு புதைத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து யாரும் எங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்ல என்று கூறிய போலீசார், இது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com