807 பேர் காணாமல் போன விவகாரம்; பயப்பட தேவையில்லை - டெல்லி போலீசார்

டெல்லியில் நாளொன்றுக்கு 54 பேர் காணாமல் போயுள்ளனர் என முன்னாள் முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

807 பேர் காணாமல் போன விவகாரம்; பயப்பட தேவையில்லை - டெல்லி போலீசார்
Published on

புதுடெல்லி,

டெல்லியில் ஜனவரி 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை பெண்கள், குழந்தைகள் என 807 பேரை காணவில்லை. அப்படியென்றால், நாளொன்றுக்கு 54 பேர் காணாமல் போயுள்ளனர் என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லியின் முன்னாள் முதல்-மந்திரியான கெஜ்ரிவால் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

அவர்களில் பலர் இளம் சிறுமிகள். நாட்டின் தலைநகர் டெல்லியில், மக்களின் பாதுகாப்பு கேள்வியாக உள்ளது. இது அச்சமூட்டும் வகையில் உள்ளது. ஆனால், பா.ஜ.க. அரசோ தூங்கி கொண்டிருக்கிறது என்றும் குற்றச்சாட்டாக கூறினார்.

Also Read
மேகாலயா சுரங்க வெடிவிபத்து வேதனை தருகிறது; ஜனாதிபதி இரங்கல்

807 பேர் காணாமல் போன விவகாரம்; பயப்பட தேவையில்லை - டெல்லி போலீசார்

டெல்லியில் சட்டம் ஒழுங்கு ஐ.சி.யு.வில் உள்ளது என கூறிய அவர், டெல்லி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்களுடைய குழந்தைகளை நீங்களே கவனம் கொண்டு பாதுகாத்திடுங்கள் என்றும் கூறினார்.

இந்நிலையில், குழந்தைகள் காணாமல் போன விவகாரத்தில் பொதுமக்கள் அச்சமடையவோ, பயப்படவோ வேண்டிய அவசியமில்லை என டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

இதுபற்றி டெல்லி போலீசின் மக்கள் தொடர்பு அதிகாரி சஞ்சய் தியாகி கூறும்போது, முந்தின ஆண்டுடன் ஒப்பிடும்போது டெல்லியில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ஒப்பிடும்போது 2026-ம் ஆண்டு ஜனவரியில், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை குறைந்தே காணப்படுகிறது.

குற்ற செயல்களை அறிவிப்பதில் சிறந்த மற்றும் வெளிப்படை தன்மையுடன் செயல்படும் கொள்கையை டெல்லி போலீசார் பின்பற்றி வருகின்றனர் என்றும் கூறினார். குழந்தைகள் காணாமல் போனது அல்லது கடத்தப்பட்ட சம்பவத்தில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கும்பலுக்கு தொடர்பு இருப்பது போல் தெரியவரவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com