மத்திய பாதுகாப்பு படையில் 84 ஆயிரம் காலி பணியிடங்கள் - நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் தகவல்

மத்திய பாதுகாப்பு படையில் 84 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளதாக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய பாதுகாப்பு படையில் 84 ஆயிரம் காலி பணியிடங்கள் - நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் தகவல்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் உள்துறை அமைச்சகம் நேற்று அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் கூறியிருப்பதாவது:-

மத்திய பாதுகாப்பு படையில் வீரர்கள் பணி ஓய்வு, கட்டாய ஓய்வு, பணியின் போது இறப்பு போன்ற காரணங்களால் தற்போது 84 ஆயிரத்து 37 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை துரிதமாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2015-16-ம் ஆண்டில் 57 ஆயிரத்து 268 காவலர் காலி பணியிடங்களுக்கு பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தி 2017-ம் ஆண்டு காவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு 58 ஆயிரத்து 373 காவலர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. அதேபோல் கடந்த ஆண்டில் 1,094 சப்-இன்ஸ்பெக்டர் காலி பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகளும் வெளியிடப்பட்டன.

கடந்த ஆண்டு 466 உதவி கமாண்டண்ட் காலி பணியிடங்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த ஆண்டுக்கு 323 உதவி கமாண்டண்ட் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com