85% ராணுவ தளவாட பொருட்கள் இந்திய நிறுவனங்களிடம் கொள்முதல்; ராணுவ தளபதி பேச்சு

இந்திய ராணுவத்துக்கு தேவையான எந்த பொருளானாலும் 85% இந்திய நிறுவனங்களிடம் இருந்தே வாங்கப்படுகின்றன என ராணுவ தளபதி கூறியுள்ளார்.
85% ராணுவ தளவாட பொருட்கள் இந்திய நிறுவனங்களிடம் கொள்முதல்; ராணுவ தளபதி பேச்சு
Published on

ஆமதாபாத்,

குஜராத்தின் ஆமதாபாத் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்திய ராணுவ தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவானே இன்று கலந்து கொண்டார். அவர் பேசும்போது, ஒரு சிக்கலை அணுகும்போது 4 விசயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். கண்டுபிடித்தல், வரையறுத்தல், மேம்படுத்துதல் மற்றும் விடுபடுதல் ஆகியவை தேவை.

சிக்கலுக்கான அடிப்படையை கண்டுபிடித்து, அதனை தீர்ப்பதற்கான வரையறையை செய்து, முன்னேற்றம் கண்டு பின்பு அதில் இருந்து விடுபட வேண்டும் என கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து பேசும்போது, இந்திய ராணுவத்துக்கு தேவையான எந்த தளவாடங்களானாலும் 85% இந்திய நிறுவனங்களிடம் இருந்தே வாங்கப்படுகின்றன. இந்திய பாதுகாப்பு தொழிலின் ஒட்டுமொத்த சூழல் அமைப்பையும் மாற்றுவதற்கு சென்னை மற்றும் லக்னோவில் உள்ள பாதுகாப்பு தளவாட மையங்கள் உதவி புரிந்துள்ளன என அவர் பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com