88% இந்தியர்கள் ஆன்லைன் கட்டணம் செலுத்துவதற்கு மொபைல் போன்களை பயன்படுத்துகின்றனர் -ஆய்வில் தகவல்

88 சதவீத இந்தியர்கள் ஆன்லைன் கட்டணம் செலுத்துவதற்கு மொபைல் போன்களை பயன்படுத்துகின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
88% இந்தியர்கள் ஆன்லைன் கட்டணம் செலுத்துவதற்கு மொபைல் போன்களை பயன்படுத்துகின்றனர் -ஆய்வில் தகவல்
Published on

புதுடெல்லி

பேபால் மற்றும் ஐபிஎஸ்ஓஎஸ் வெளியிட்டு உள்ள கூட்டு ஆய்வு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கணக்கெடுக்கப்பட்ட இந்தியர்களில் 88 சதவீதம் பேர் மொபைல் சாதனத்தை ஆன் லைன் மூலம் பணம் செலுத்துவதற்கு பயன்படுத்துகின்றனர், இது உலகளாவிய சராசரியான 71 சதவீதத்தை விட அதிகமாகும். இந்த அறிக்கை 2019 ஜூலை 23 மற்றும் ஆகஸ்ட் 25 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட உலகளாவிய கணக்கெடுப்பின் ஒரு பகுதியாகும்.

உலகளாவிய சராசரியான 63 சதவீத வணிகர்களுக்கு எதிராக, இந்தியாவில் 81சதவீத வணிகர்கள் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்கும் நுகர்வோர் விருப்பங்களுக்கு பதிலளிப்பதற்கும் மொபைல் கட்டணங்களை ஏற்றுக்கொள்வதற்கு உகந்ததாக உள்ளனர் என பேபால் தி ஐபிஎஸ்ஓஎஸ்எம் காமர்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com