8,931 நாட்கள்: இந்திய அரசாங்கத்தில் நீண்ட காலம் பதவி: பிரதமர் மோடி சாதனை

இதற்கு முன்பு சிக்கிம் முதல்வராக பவன் குமார் சாம்லிங் 8,930 நாட்கள் பதவி வகித்து சாதனை படைத்திருந்தார்
8,931 நாட்கள்: இந்திய அரசாங்கத்தில் நீண்ட காலம் பதவி: பிரதமர் மோடி சாதனை
Published on

புதுடெல்லி,

இந்திய அரசாங்கத்தில் நீண்ட காலம் பதவி வகித்த தலைவராக பிரதமர் நரேந்திர மோடி புதிய சாதனை படைத்துள்ளார். குஜராத் முதல்வராகவும், பின்னர் பிரதமராகவும் மொத்தம் 8,931 நாட்கள் (தற்போது வரை) பதவி வகித்து வருகிறார். இதன் மூலம் நீண்ட காலம் ஆட்சியில் இருந்த தலைவராக அவர் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு சிக்கிம் முதல்வராக பவன் குமார் சாம்லிங் 8,930 நாட்கள் பதவி வகித்து சாதனை படைத்திருந்தார். அந்த சாதனையை பிரதமர் மோடி தற்போது முறியடித்துள்ளார்.

முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் பிரதமர் மோடியின் யூடியூப் சேனல் பின்தொடர்பாளர்கள் எண்ணிக்கை 30 மில்லியனை எட்டியது. அதேபோல், இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் பேர் அவரை பின்தொடர்கின்றனர். பதவியில் உள்ள உலக தலைவர்களில் இவ்வளவு அதிகமான பின்தொடர்பாளர்களை கொண்ட முதல் தலைவர் என்ற பெருமையும் மோடிக்கு கிடைத்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com