திருப்பதி நவராத்திரி பிரமோற்சவத்தின் 8ஆம் நாள் - சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சாமி காட்சி

திருப்பதி நவராத்திரி பிரமோற்சவத்தின் 8ஆம் நாளான இன்று சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சாமி காட்சியளித்தார்.
திருப்பதி நவராத்திரி பிரமோற்சவத்தின் 8ஆம் நாள் - சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சாமி காட்சி
Published on

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கமாகும். இந்த விழாவைக் காண பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருப்பதில் வீதி உலாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அரசு பரிந்துரையின்படி, பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, நவராத்திரி விழா கொண்டாடப்பாடு வருகிறது. அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 8ஆம் நாளான இன்று, சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி காட்சியளித்தார்.

வீதி உலா ரத்து செய்யப்பட்டுள்ளதால் அதற்கு மாற்றாக கல்யாண உற்சவ மண்டபத்தில் ஜீயர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாட, அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com