ஹார்முஸ் நீரிணையை கடந்து 8-வது கப்பல் இந்தியாவை நோக்கி வரத் தொடங்கியது

16 இந்தியக் கப்பல்கள் நீரிணையை விட்டு வெளியேற காத்துக்கிடக்கின்றன.
ஹார்முஸ் நீரிணையை கடந்து 8-வது கப்பல் இந்தியாவை நோக்கி வரத் தொடங்கியது
Published on

புதுடெல்லி,

மேற்கு ஆசிய போரின் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது. இதனால் இந்தியா உள்பட உலகின் பல நாடுகளுக்கும் எரிபொருள் போக்குவரத்து தடைபட்டது. இது உலகளாவிய நெருக்கடியை ஏற்படுத்தியது. இருப்பினும் இந் திய அரசின் ராஜதந்திர நடவடிக்கைகள் காரணமாக இந்தியக் கொடி கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் அரசு திறந்து விட்டது.

இதன் காரணமாக சில கப்பல்கள் முழுமை யான எல்.பி.ஜி. சரக்குடன் ஏற்கனவே இந்தியாவுக்கு வந்தன. மேலும் சில கப்பல்கள் பகுதியளவு சரக்குடன் வந்தன. இந்த நிலையில் "கிரீன் சான்வி” என்ற கப்பல், 25 மாலுமிகளுடன் 46,650 டன் எல்.பி.ஜி. சரக்கை ஏற்றிக்கொண்டு ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்திருப்பதாக மத்திய அரசு நேற்று தெரிவித்தது.

இந்த கப்பல் கடந்ததைத் தொடர்ந்து, இந்தியக்கொடியுடன் கூடிய 17 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியின் மேற்குப்பகுதி யில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ஈரான் அனுமதியுடன் ஹார்முஸ் நீரிணையை கடந்து கிரீன் ஆஷா எல்பிஜி (Green Asha LPG) கப்பல் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. விரைவில் இந்த கப்பல் இந்தியாவை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. போர் தொடங்கியது முதல் இதோடு சேர்த்து இதுவரை 8 கப்பல்கள் நீரிணையை கடந்துள்ளன. மேலும் 16 இந்தியக் கப்பல்கள் நீரிணையை விட்டு வெளியேற காத்துக்கிடக்கின்றன.

போர் தொடங்கியபோது, ஹார்முஸ் நீரிணையில் இந்தியக் கொடியு டன் 28 கப்பல்கள் இருந்தன. இவற்றில், 24 கப்பல்கள் நீரிணையின் மேற்கு பகுதியிலும், 4 கப்பல்கள் கிழக்கு பகுதியிலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com