கோவில் சுவர் இடிந்து 9 பேர் பலி - பிரதமர் மோடி நிவாரணம்

சுவர் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்பு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கோவில் சுவர் இடிந்து 9 பேர் பலி - பிரதமர் மோடி நிவாரணம்
Published on

புதுடெல்லி,

ஆந்திர மாநிலம் சிம்மாசலத்தில் உள்ள ஸ்ரீ வராஹ லட்சுமி நரசிம்ம கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு முதல் தரிசனத்திற்காக அதிகாலையில் பல பக்தர்கள் வந்திருந்தனர். அதிகாலை 2.30 மணியளவில் பலத்த மழை பெய்ததால் சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்பு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் .

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும். என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com