உத்தர பிரதேசத்தில் விஷ சாராயம் குடித்த 9 பேர் உயிரிழப்பு; 41 பேருக்கு சிகிச்சை

உத்தர பிரதேசத்தில் விஷ சாராயம் குடித்த 9 பேர் உயிரிழந்து உள்ளனர். 41 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் விஷ சாராயம் குடித்த 9 பேர் உயிரிழப்பு; 41 பேருக்கு சிகிச்சை
Published on

ஆசம்கார்,

உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. இதனை முன்னிட்டு பல இடங்களில் கலப்பட சாராய விற்பனை அதிகரித்து உள்ளது. இந்த நிலையில், ஆசம்கார் மாவட்டத்தில் சிலர் சாராயம் குடித்துள்ளனர். இதில், 9 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுதவிர, 41 பேர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

அவர்களில் 12 பேரின் நிலை கவலைக்குரிய வகையில் உள்ளது என கூறப்படுகிறது. சாராயத்தில் விஷம் கலக்கப்பட்டு இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஆணையாளர் விஜய் விஷ்வாஸ் பண்ட் கூறும்போது, மது விற்பனையில் ஈடுபட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com