உத்தரபிரதேசத்தில் விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தில் 9 லட்சம் புகார்கள்

உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் சலுகை பெறும் 9 லட்சம் விவசாயிகள் இன்னும் தங்களின் கடன் தொகை வசூலிக்கப்படுவதாக புகார் அளித்துள்ளனர். #FarmLoanWaiverUP
உத்தரபிரதேசத்தில் விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தில் 9 லட்சம் புகார்கள்
Published on

லக்னோ,

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யனாத் தலைமையின் கீழ் செயல்படும் அரசாங்கம், கடந்த ஆண்டு மார்ச் மாதம் மாநிலத்தின் வங்கிகளில் சுமார் 1 லட்சத்திற்கு மேல் விவசாய கடன் வாங்கியிருக்கும் 86 லட்சம் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வதாக அறிவித்தது.

மேலும் இத்திட்டத்தின் கீழ் 34 லட்சம் விவசாயிகள் கடன்களுக்கான 21,000 கோடி ரூபாயை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் சலுகை பெறும் சுமார் 9 லட்சம் விவசாயிகள் தங்களுக்கான கடன் தொகை இன்னும் வசூலிக்கப்படுவதாக புகார் அளித்துள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் ஆயிரம் புகார்கள் வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தங்களுக்கான கடன் தள்ளுபடி சான்றிதழ் இருந்தும் வங்கிகள் தங்களிடம் இன்னும் கடன் தொகையை வசூலிப்பதாகவும், வங்கியின் இருப்புத்தொகையில் இருந்து பணத்தினை வசூல் செய்வதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதனிடையே விவசாயிகளின் புகார்களை கவனித்திற்கு கொண்டு வந்துள்ள உத்தரபிரதேச அரசாங்கம், தள்ளுபடி திட்டம் குறித்து வரும் 20 ஆம் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com