உத்தரகாண்ட்: வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 9 பேரை தேடும் பணி தீவிரம்

மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்தது.
உத்தரகாண்ட்: வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 9 பேரை தேடும் பணி தீவிரம்
Published on

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டம் பாலிகர் பகுதியில் இன்று மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்தது. கனமழையால் அப்பகுதியில் உள்ள ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அப்போது, ஆற்றின் அருகே கட்டப்பட்டு வந்த ஓட்டலில் கட்டிட வேலை செய்துவந்த 9 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  

X

Daily Thanthi
www.dailythanthi.com