இந்தியாவில் 2 மாதங்களில் 90 புதுவகை உருமாறிய கொரோனா வைரசுகள்: அரசு தகவல்

நாட்டில் 2 மாதங்களில் 90 புதுவகை உருமாறிய கொரோனா வைரசுகள் கண்டறியப்பட்டு உள்ளன என மத்திய சுகாதார துறை இணை மந்திரி தெரிவித்து உள்ளார்.
இந்தியாவில் 2 மாதங்களில் 90 புதுவகை உருமாறிய கொரோனா வைரசுகள்: அரசு தகவல்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை எம்.பி. மற்றும் மத்திய சுகாதார துறை இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் அவையில் கூறும்போது, இந்தியாவில் கடந்த 60 நாட்களில் 90 புதிய வகை உருமாறிய கொரோனா வைரசுகள் கண்டறியப்பட்டு உள்ளன.

ஒமைக்ரான் மற்றும் அவற்றின் பிற உருமாறிய வகைகள் தொடர்ந்து இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அவற்றில் எக்ஸ்.பி.பி., பி.கியூ. ஆகியவை நாட்டில் பரவலாக மேலோங்கி காணப்படுகிறது என்று தெரிவித்து உள்ளார்.

சில நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதும், சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், கொரியா, தாய்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து மற்றும் அந்நாடுகள் வழியே வர கூடிய விமான பயணிகள் கட்டாயம் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை சான்றிதழ்களை கொண்டு வருவது அவசியம் என மத்திய அரசு அறிவித்தது.

இதுதவிர, அனைத்து சர்வதேச விமான பயணிகளிடம் மொத்தம் 2 சதவீதம் என்ற அளவில் இந்திய வருகைக்கு பின்னர் கொரோனா பரிசோதனைகள் விமான நிலையத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது என்று பவார் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com