உத்தரபிரதேச மாநிலத்தில் மீண்டும் கொடுமை பாலியல் பலாத்காரம் செய்து 2 சிறுமிகள் கொலை மற்றொரு சகோதரிக்கு தீவிர சிகிச்சை

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவில் சகோதரிகளான 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர். மற்றொரு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உத்தரபிரதேச மாநிலத்தில் மீண்டும் கொடுமை பாலியல் பலாத்காரம் செய்து 2 சிறுமிகள் கொலை மற்றொரு சகோதரிக்கு தீவிர சிகிச்சை
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. இந்நிலையில் உன்னாவில் 2 தலித் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த சகோதரிகள் 3 பேர் மாட்டுக்கு தீவனம் வாங்க நேற்று முன்தினம் மதியம் கடைவீதிக்கு சென்றனர். மாலை நேரம் ஆகியும் சிறுமிகள் வீடு திரும்பாததால், சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்களை பல இடங்களில் தேடினர்.

அப்போது, சிறுமிகள் 3 பேரும் தங்களது சொந்த வயலில் துப்பட்டாவால் ஒன்றாக வாயில் கட்டப்பட்ட நிலையில், கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதில் 2 பேர் சம்பவ இறந்து கிடந்தனர். மற்றொரு சிறுமி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 3 பேரும் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சிறுமியை உடனடியாக அருகில் உள்ள கான்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். தகவலறிந்து அங்கு விரைந்த போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com