ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10,621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10,621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10,621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

அமராவதி,

ஆந்திர மாநிலத்தில் முதலில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்தது. அதையடுத்து கடந்த மாதத்தில் இருந்து கொரோனா பாதிப்பு மிக அதிக எண்ணிக்கையில் இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10,621 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,93,090 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரேநாளில் கொரோனாவால் 92 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 3,633 ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திரா முழுவதும் கொரோனா தொற்றிலிருந்து 2,95,248 பேர் குணமடைந்த நிலையில் தற்போது வரை 94,209 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com