உலகின் மாசுபட்ட 100 நகரங்களில் 93 இந்திய நகரங்கள் - வடமாநிலங்களில் மோசமடைந்த காற்றின் தரம்

தீபாவளிக்குப் பிறகு வட இந்திய மாநிலங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மாசுபட்ட 100 நகரங்களில் 93 இந்திய நகரங்கள் - வடமாநிலங்களில் மோசமடைந்த காற்றின் தரம்
Published on: 

புதுடெல்லி,

உலகில் மாசுபட்ட நகரங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் முதல் 100 நகரங்களில் 93 நகரங்கள் இந்தியாவில் உள்ளது தெரியவந்துள்ளது. இதில் பெரும்பாலான நகரங்கள் வட இந்தியாவில் உள்ளன. முதல் 10 இடங்களில் பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேச மாநிலங்களின் நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

முதல் 10 இடங்கள்

முதல் 10 இடங்களில் பாகிஸ்தானின் லாகூரை தவிர மற்ற 9 நகரங்களும் இந்தியாவைச் சேர்ந்தவை ஆகும். இந்த பட்டியலில் ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் முதல் இடத்தில் உள்ளது. தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தின் பரித்கோட், பதிண்டா, அரியானாவின் சிர்சா, பிவானி, உத்தர பிரதேசத்தின் புதோன், அரியானாவின் ஹிசார், அமிர்தசரஸ், பாகிஸ்தானின் லாகூர் மற்றும் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் ஆகிய நகரங்கள் முதல் 10 இடங்களில் உள்ளன.

தீபாவளிக்குப் பிறகு...

இந்த முதல் 10 இடங்களில் டெல்லி இல்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். டெல்லி 15-வது இடத்தில் உள்ளது. தீபாவளிக்குப் பிறகு வட இந்திய மாநிலங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு அறிக்கையில், தீபாவளி பண்டிகைக்கு பிறகு உலகின் மாசுபட்ட 100 நகரங்களில் 99 நகரங்கள் இந்தியாவில் இருப்பதாக ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

X