

புவனேஸ்வர்,
வங்கக்கடலில் உருவான 'அர்னாப்' புயல், ஒடிசா மாநிலத்தின் தெற்கு பகுதிகளை நோக்கி நகர்ந்து வந்தது. இதையடுத்து மாநில அரசு தீவிர முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளில் இறங்கியது. புயல் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் இருந்த 2,245 கர்ப்பிணிப் பெண்களை மீட்டுப் பாதுகாப்பாக அரசு மருத்துவமனைகளில் அனும தித்தனர். இந்தநிலையில், நேற்று அர்னாப் புயல் அண்டை மாநிலமான ஆந்திராவின் கட லோரப் பகுதியில் கரையை கடந்தது. அந்த நேரத்தில் ஒடிசா மாநிலம் முழுவதும் பலத்த காற்றும், கனமழையும் கொட்டித் தீர்த்தது.
வெளியே புயல் கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருந்த அதே இக்கட்டான சூழ லில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்களுள் 931 பேருக்கு பாதுகாப்பான முறையில் பிரசவம் நடந்து குழந்தைகள் பிறந்தன. இதில் கஞ்சம் மாவட்டத்தில் மட்டும் 220 குழந்தைகள் பிறந்தன.
புயல் கரையை கடந்த நேரத் தில் பிறந்த தங்களது குழந்தைகளுக்கு புயல் மற்றும் மழையைக் குறிக்கும் வித மாக பெற்றோர் பெயரிட்டு மகிழ்ந்தனர். அதன்படி ஆண் குழந்தைகளுக்குப் புய லின் பெயரான 'அர்னாப்', 'தூபான்' (புயல்) என்றும், பெண் குழந்தைகளுக்கு கன மழையைக் குறிக்கும் விதமாக 'வர்ஷா', 'பதாசி' என்றும் பெயர் சூட்டி உள்ளனர்.