

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதன்படி, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து உள்ளது.
இந்த நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 66 லட்சத்து 85 ஆயிரத்து 415 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. இதனால், மொத்த தடுப்பூசி எண்ணிக்கை 94 கோடியே 70 லட்சத்து 10 ஆயிரத்து 175 ஆக உயர்ந்து உள்ளது என தெரிவித்து உள்ளது.