98.18 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டன - ரிசர்வ் வங்கி தகவல்

இதுவரை 98.18 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டு உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
98.18 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டன - ரிசர்வ் வங்கி தகவல்
Published on

மும்பை,

புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக கடந்த 2023-ம் ஆண்டு மே 19-ந் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மூலம் மாற்றிக்கொள்ள அதே ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்தும் நாடு முழுவதும் உள்ள 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் மூலம் அந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த அலுவலகங்களுக்கு தபால் மூலம் 2,000 ரூபாய் நோட்டுகளை அனுப்பி தங்கள் வங்கிக்கணக்கில் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.

இவ்வாறு மக்கள் தங்களிடம் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றி வந்தனர். இதன் மூலம் 98.18 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டு உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

அந்த வகையில் 2023 மே 19-ந் தேதி நிலவரப்படி ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாகவும், நேற்று முன்தினம் நிலவரப்படி வெறும் ரூ.6,471 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே மக்களிடம் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இதன் மூலம் 98.18 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி இருப்பதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com