

பங்காருபேட்டை
மருந்து தயாரிப்பு நிறுவனம்
கோலார் மாவட்டம் பங்காருபேட்டையில் கடந்த 1920-ம் ஆண்டு பிளேக் நோய் பரவியது. அதனால் ஏராளமான மக்கள் செத்து மடிந்தனர். இதுபற்றி அப்போதைய மைசூரு மாகாண அரசு நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில் விளம்பரம் வெளியிட்டது.
அதைப்பார்த்த டாக்டர் கியூ.எச்.லின் என்பவர் 1920-ம் ஆண்டு பங்காருபேட்டையில் மருந்து மற்றும் மாத்திரை தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.
உயிர்காக்கும் சேவையில் ஈடுபட்ட அரசு மற்றும் நோய் எதிர்ப்பு மருந்துகளை கண்டுபிடித்து தயாரித்து மக்களுக்கு வழக்கினர். பின்னாளில் இந்த நிறுவனம் இந்திய அரசால் நடத்தப்பட்டு வந்தது. கடந்த 2014-ம் ஆண்டு இந்த மருந்து தயாரிப்பு நிறுவனம் மூடப்பட்டது.
கோரிக்கை
அங்கு தற்போது மருந்து, மாத்திரைகள் எதுவும் உற்பத்தி செய்யப்படுவது இல்லை. அந்த கட்டிடம் ஒரு தேவாலயத்திடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. மேலும் அதன் நிர்வாகத்தை அந்த தேவாலய அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. மக்களின் உயிரை காக்க உதவிய 100 ஆண்டு பழமை வாய்ந்த அந்த நிறுவனத்தை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.