

தேவநாகரி,
கர்நாடகாவின் தேவநாகரி மாவட்டத்தில் வசித்து வரும் 13 வயது சிறுவனுக்கு முதலில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் அறிகுறிகளாக அதிக அளவு காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் சுவாச பாதிப்பு ஆகியவை ஒரே நாளில் ஏற்பட்டு உள்ளது.
இதனால் அச்சமடைந்த அவனது பெற்றோர் சிறுவனை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். இதில், கொரோனா பாதிப்புக்கு பின்னர் சிறுவனின் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இதுபற்றி சாமனூர் சிவசங்கர் அப்பா மருத்துவ அறிவியல் மையத்தின் மருத்துவ இயக்குனரான மருத்துவர் கலப்பனாவர் கூறும்போது, சிறுவனுக்கு அக்யூட் நெக்ரோடைசிங் என்செபலோபதி என்ற அரிய வகை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இதனால், கடந்த ஒரு வாரம் வரை சிகிச்சை அளிக்கப்பட்டு, அதில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என கூறியுள்ளார். கொரோனா பாதிப்புக்கு பின்பு இந்த வகை வியாதியால் பாதிக்கப்படுவது இதுவே முதல் முறை.
இதற்கு தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். இதனால் உயிரிழப்பு ஏற்படுவதற்கான ஆபத்து தவிர்க்கப்படும் என கூறியுள்ளார்.