ஒடிசாவில் 3 அடி நீள பாம்பை விழுங்கிய 4 அடி நீள பாம்பு

ஒடிசாவில் 3 அடி நீள பாம்பை 4 அடி நீள பாம்பு ஒன்று விழுங்கியுள்ளது.
ஒடிசாவில் 3 அடி நீள பாம்பை விழுங்கிய 4 அடி நீள பாம்பு
Published on

குர்டா,

ஒடிசாவின் குர்டா மாவட்டத்தில் பாலகதி கிராமத்தில் புதரோரம் சென்று கொண்டிருந்த 4 அடி நீள பாம்பு ஒன்று 3 அடி நீள பாம்பை விழுங்கியுள்ளது. இந்த இரண்டு பாம்புகளும், கோப்ரா எனப்படும் நாக பாம்பு வகையை சேர்ந்தது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த பாம்பு உதவி குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் சிறிய 3 அடி நீள பாம்பை மீட்டு வன பகுதியில் விட்டனர். பொதுவாக பாம்புகள் தவளை, எலி உள்ளிட்ட சிறிய விலங்குகளை உணவாக உண்ணும்.

எனினும், ஒரு சில பெரிய பாம்புகள் பிற சிறிய பாம்புகளை உண்ணும் வழக்கமும் கொண்டுள்ளன. மனிதர்களில் சிலர் நரமாமிசம் உண்பது போன்று பாம்புகளிடமும் இந்த தன்மை உள்ளது. இதுபற்றி வனவாழ் அதிகாரி சுபேந்து மல்லிக் கூறும்போது, இதுபோன்று பிற பாம்புகளை உண்ணும் வழக்கம் ஒரு சில பாம்புகளிடம் காணப்படுகிறது என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com