அழகான உடல்... பண்பாடான ஆடைகளை அணியுங்கள் இளம்பெண்களே; பா.ஜ.க. தலைவர் பேச்சால் சர்ச்சை

அழகான உடலை கடவுள் கொடுத்துள்ளார் அதனால், பண்பாடான ஆடைகளை அணியுங்கள் என இளம்பெண்களை பற்றி பா.ஜ.க. தலைவர் பேசியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
அழகான உடல்... பண்பாடான ஆடைகளை அணியுங்கள் இளம்பெண்களே; பா.ஜ.க. தலைவர் பேச்சால் சர்ச்சை
Published on

புதுடெல்லி,

அனுமன் ஜெயந்தி மற்றும் மகாவீர் ஜெயந்தி ஆகியவற்றை முன்னிட்டு நடந்த மத நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க. பொது செயலாளர் விஜய் வர்க்கியா கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர், நான் இரவில் வீட்டை விட்டு வெளியே போகும்போது, நன்றாக படித்த இளம் மக்கள் மற்றும் குழந்தைகள் போதை பொருளுக்கு அடிமையாக இருப்பதனை பார்த்தேன்.

உடனே காரில் இருந்து இறங்கி, அவர்களது மது மயக்கம் தெளிவதற்காக, ஆறேழு முறை அவர்களது கன்னத்தில் நன்றாக அறைய வேண்டும் போன்ற உணர்வு ஏற்பட்டது.

பெண்களில் நாம் பெண் தெய்வங்களை பார்க்கிறோம். ஆனால் சிலர், மோசம் வாய்ந்த உடைகளை அணிந்து கொண்டு, அங்கேயும் இங்கேயும் சுற்றி கொண்டு, அவர்கள் பெண் தெய்வங்களை வெளிப்படுத்தவில்லை.

சூர்ப்பனகை போன்று காணப்படுகிறார்கள். கடவுள் உங்களுக்கு நல்ல மற்றும் அழகான உடலை கொடுத்து உள்ளார். அதனால், நண்பர்களே நன்றாக ஆடை அணியுங்கள் என கூறியுள்ளார்.

ராமாயணத்தில், இலங்கை அரசன் ராவணனின் சகோதரியாக சூர்ப்பனகை வருகிறார். அவரது இந்த பேச்சு அடங்கிய வீடியோவால் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com