மராட்டிய மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டுகளை ஆதரிக்கும் ஆதாரங்கள் இல்லை என்று கூறி வழக்கை மும்பை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற மராட்டிய சட்டமன்ற தேர்தல் முடிவுகளை எதிர்த்தும், அந்த தேர்தல் முடிவுகள் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடனும் சேட்டன் சந்திரகாந்த் ஆகிரே என்பவர் மும்பை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மும்பை ஐகோர்ட்டு போலி வாக்களிப்பு அல்லது தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டுகளை ஆதரிக்கும் ஆதாரங்கள் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

எந்தவொரு வாக்குச் சாவடியிலும் எந்தவிதமான விரும்பத்தகாத சம்பவங்கள் அல்லது மோசடிகள் பதிவாகவில்லை என்றும், தேர்தல் முடிவுகளை ரத்து செய்வதற்கான எந்தவொரு நம்பகமான அல்லது சட்டப்பூர்வ அடிப்படையையும் மனுதாரர் சமர்ப்பிக்கத் தவறிவிட்டார் என்றும் கோர்ட்டு குறிப்பிட்டுள்ளது.

வெறும் அரசியல் கருத்துக்கள், நடைமுறை சந்தேகங்கள் அல்லது ஊடக அறிக்கைகள் முழு ஜனநாயக செயல்முறையையும் தலைகீழாக மாற்றுவதை நியாயப்படுத்த முடியாது என்று கூறிய கோர்ட்டு, இந்த மனு "முழுமையான விரக்தியில்" தாக்கல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com