பஞ்சாப் எல்லையில் சீனாவின் டிரோன் சிக்கியது

பஞ்சாப் எல்லையில் சீனாவின் டிரோன் சிக்கியுள்ளது.
பஞ்சாப் எல்லையில் சீனாவின் டிரோன் சிக்கியது
Published on

சண்டிகார்,

பஞ்சாபின் பசில்கா மாவட்டத்தில் சர்வதேச எல்லை அருகே சீனாவில் தயாரிக்கப்பட்ட டிரோன் ஒன்று மீட்கப்பட்டு உள்ளது. 24 மணி நேர இடைவெளிக்குள் மீட்கப்பட்ட 2-வது டிரோன் இதுவாகும்.

எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் பஞ்சாப் போலீசார் இணைந்து பசில்கா பகுதியில் நேற்று முன்தினம் தேடுதல் வேட்டை நடத்தியபோது இந்த மாம டிரோனை திறந்த வெளியில் கண்டுபிடித்தனர். இது சீனாவில் தயாரிக்கப்பட்ட டி.ஜே.ஐ. மாட்ரைஸ் 300 ஆர்.டி.கே. என்ற வகை டிரோனாகும்.

அவர்கள் சனிக்கிழமை வேறு இடத்தில் இதுபோன்ற ஒரு டிரோனை கண்டுபிடித்தனர். அது 2.730 கிலோ கிராம் ஹெராயின் போதைப் பொருளுடன் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com