

சண்டிகார்,
அரியானா மாநிலம் கர்ணல் மாவட்டம் அருகே உள்ள சுங்கச் சாவடியில் கடந்த சனிக்கிழமை விவசாயிகள் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய விவசாயிகளை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
இந்த சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் படுகாயம் அடைந்தனர். விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மேலும், தாக்குதல் குறித்து பல்வேறு தரப்பிலிருந்து மாநில அரசுக்கு எதிராக கண்டனம் எழுந்துள்ளது. இந்நிலையில், அரியானா மாநில முன்னாள் முதல் மந்திரி பூபிந்தர் சிங் ஹூடா, தீபேந்தர் ஹூடா, குமாரி செல்ஜா உள்ளிட்டோர் அடங்கிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குழு நாளை தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.