யோகா படிக்க வந்த பெல்ஜியம் நாட்டுப் பெண்ணை பலாத்காரம் செய்த நாட்டு வைத்தியர் கைது..!

யோகா படிக்க வந்த பெல்ஜியம் நாட்டுப் பெண்ணை பலாத்காரம் செய்த நாட்டு வைத்தியரை போலீசார் கைது செய்தனர்.
யோகா படிக்க வந்த பெல்ஜியம் நாட்டுப் பெண்ணை பலாத்காரம் செய்த நாட்டு வைத்தியர் கைது..!
Published on

திருவனந்தபுரம்,

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஷாஜி. நாட்டு வைத்தியர். அந்த பகுதியில் ஆயுர்வேத சிகிச்சை மையம் நடத்தி வருகிறார். நெய்யார் அணைப் பகுதியில் யோகா பயிற்சி மையங்கள் உள்ளன.

இந்த நிலையில் இங்குள்ள ஒரு மையத்தில் யோகா பயிற்சிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெல்ஜியம் நாட்டை சேர்ந்த ஒரு இளம்பெண் வந்தார். அப்போது அங்குள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தார். விடுதியில் வைத்து பெல்ஜியம் நாட்டுப் பெண்ணுடன் ஷாஜிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணை தனது ஆயுர்வேத சிகிச்சை மையத்திற்கு வருமாறு அவரை ஷாஜி அழைத்து உள்ளார்.

அதன்படி சில தினங்களுக்கு முன்பு அவர் ஷாஜியின் ஆயுர்வேத சிகிச்சை மையத்திற்கு பெண் சென்றார். அப்போது அங்கு வைத்து இளம்பெண்ணை ஷாஜி மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண் நெய்யார் அணை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து வைத்தியர் ஷாஜியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com