மனைவியுடன் தகராறு: மகனை அடித்துக்கொன்ற தந்தை

6 வயது மகனை அடித்துக் கொன்ற தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
மனைவியுடன் தகராறு: மகனை அடித்துக்கொன்ற தந்தை
Published on

பாட்னா,

பீகார் மாநிலம் பாட்னாவுக்கு ஒரு தம்பதியினர் தங்களது 6 வயது மகனுடன் சுற்றிப்பார்க்க வந்துள்ளனர். பின்னர் அவர்கள் பாட்னா ரெயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டல் அறையில் நேற்றிரவு தங்கியுள்ளனர். அப்போது கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறு, முற்றிய நிலையில், ஆத்திரம் அடைந்த அந்த நபர், தனது மகன் என்றும் பாராமல் சரமாரியாக அடித்து தரையில் வீசியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.

இதுகுறித்து சிறுவனின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாகியுள்ள சிறுவனின் தந்தையை தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com