நோயாளிக்கு ரத்தம் கொடுத்து, அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்

நோயாளிக்கு மருத்துவர் ஒருவர் தேவையான ரத்தம் கொடுத்து, அறுவை சிகிச்சை செய்து அவரது உயிரை காப்பாற்றியுள்ளார்.
நோயாளிக்கு ரத்தம் கொடுத்து, அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்
Published on

டேராடூன்,

உத்தரகாண்டின் டேராடூன் நகரில் உள்ள டூன் மருத்துவ கல்லூரிக்கு நபர் ஒருவரை சிகிச்சைக்கு சேர்த்து உள்ளனர். அவர் ஆழமுள்ள குழி ஒன்றில் தவறி விழுந்ததில், மார்பு, இடது கை மற்றும் தொடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து 3 நாட்கள் அவர் ஐ.சி.யூ.வில் வைக்கப்பட்டார். இதன்பின்னர், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.

எனினும், போதிய அளவுக்கு ரத்தம் இல்லாத நிலையில், அறுவை சிகிச்சை செய்வது தள்ளி போனது. இதனால், அந்நபரின் மகள் ரத்தம் கொடுக்க முன் வந்துள்ளார். ஆனால், சில சுகாதார விசயங்களால் அந்த மகளால் ரத்தம் கொடுக்க இயலாத சூழல் ஏற்பட்டது.

இந்த நிலையில், அறுவை சிகிச்சை நிபுணரான ஷஷாங் சிங் ரத்தம் கொடுக்க முடிவு செய்துள்ளார். அதன்பின்னர், அவரே அறுவை சிகிச்சையும் செய்து அந்நபரை காப்பாற்றி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com