கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 2,362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,51,212 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 20 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,430 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 31,063 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 8,08,700 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com