கர்நாடகாவில் இன்று மேலும் 2,584 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கர்நாடகாவில் இன்று மேலும் 2,584 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இன்று மேலும் 2,584 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
Published on

பெங்களூரு,

கர்நாடகாவில் இன்று மேலும் 2,584 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,53,796 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு இன்று மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,453 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 2,881 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,11,581 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 30,743 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com