மராட்டிய மாநிலத்தில் இன்று மேலும் 9,601 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மராட்டிய மாநிலத்தில் இன்று மேலும் 9,601 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மராட்டிய மாநிலத்தில் இன்று மேலும் 9,601 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

பெங்களூரு,

மராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று 9,601 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,31,719 ஆக அதிகரித்துள்ளது.

மராட்டிய மாநிலத்தில் இன்று 322 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,316 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் 10,725 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,66,883 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் தற்போது 1,49,214 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மராட்டிய மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com