தலையில் கல்லைப்போட்டு அரசு பஸ் டிரைவர் கொலை

கலபுரகியில் தலையில் கல்லைப்போட்டு அரசு பஸ் டிரைவர் கொலை செய்யப்பட்டார்.
தலையில் கல்லைப்போட்டு அரசு பஸ் டிரைவர் கொலை
Published on

கலபுரகி:

கலபுரகி மாவட்டம் அப்சல்புரா தாலுகா ரேவ் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சிந்தனூரை சேர்ந்தவர் சிவசரணப்பா. அரசு பஸ் டிரைவர். பணியில் அலட்சியமாக இருந்ததால் சிவரணப்பா பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார். பின்னர் அவரது பணி இடைநீக்கத்தை போக்குவரத்து கழக அதிகாரிகள் ரத்து செய்தார்கள். இதையடுத்து, நேற்றில் இருந்து அவர் மீண்டும் டிரைவர் வேலைக்கு செல்ல இருந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற சிவசரணப்பா வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

நேற்று காலையில் கிராமத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் பலத்த கத்திக்குத்து காயம் மற்றும் தலை நசுங்கியபடி சிவசரணப்பா கொலை செய்யப்பட்டு கிடந்தார். மர்மநபர்கள் அவரை கத்தியால் குத்திவிட்டு, அவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com