

கொல்கத்தா,
டாட்டூஸ் எனப்படும் பச்சைக்குத்தும் பழக்கம் என்பது நம்முடைய முன்னோர்கள் காலத்திலிருந்து பின்பற்றப்படும் ஒரு நடைமுறையாகும். ஊசியின் மூலம் உடல் முழுவதும் பச்சைக் குத்தும்போது நரம்புகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்காகவே இந்த முறையை மேற்கொண்டு வந்தனர்.
ஆனால் இன்றைக்குள்ள இளைஞர்கள் பல்வேறு காரணங்களுக்காக உடல் முழுவதும் டாட்டூ போடும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு டிரெண்டாகும் டாட்டூகளை ஏன் மக்கள் அதிகளவில் பின்பற்றத் தொடங்கிவிட்டனர். டாட்டூவை, ஆண்களை மட்டுமல்லாது. இன்றைய இளம்பெண்களும் விரும்பிப் போட்டுக் கொள்கிறார்கள்.
இந்த வண்ணவண்ண டாட்டூக்களின் வருகை, இன்றைய இளம்தலைமுறையின் புதிய பேஷனாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். அதிலும் சிலர் உடலில் பிடித்தமான ஒரு இடத்தில் மட்டும் போட்டுக் கொள்கிறார்கள். ஆனால், ஒருசிலர் உடல் முழுவதும் போட்டுக் கொள்கிறார்கள். எனினும், இளைஞர்கள் மத்தியில் இந்த டாட்டூ கலாசாரம் அழகும், அன்பும் சார்ந்த விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இதில் ஒருசிலர் அரசியல் கட்சி தலைவர்கள் பெயர், முகம்,காதலி, மனைவி, தாய், வெற்றி, விஷேசம் ஆகியவற்றைக் குறிக்கும் வகையில் டாட்டூ போட்டுக் கொள்கின்றனர்.
அந்த வகையில், நபர் ஒருவர் தனது கீழ் உதட்டில் காதலியின் பெயரை டாட்டூ போட்டு சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளார். அந்த நபர், தன் காதலியின் பெயரான 'அம்ருதா' என்பதை டாட்டூவாகப் போட்டுள்ளார்.
இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை, டாட்டூ ஆர்ட்டிஸ்ட் அபிஷேக் சப்கல் என்பவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதுதான் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ 9 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருந்தாலும், பலரும் இதுகுறித்து கருத்துகளைப் பதிவிட்டு விமர்சனம் செய்து வருகின்றனர்.
View this post on Instagram