மராட்டிய மாநிலத்தில் ரிக்டர் 3.5 அளவில் லேசான நிலநடுக்கம்

மராட்டிய மாநிலத்தில் ரிக்டர் 3.5 அளவிலான லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
மராட்டிய மாநிலத்தில் ரிக்டர் 3.5 அளவில் லேசான நிலநடுக்கம்
Published on

மும்பை,

மராட்டிய மாநில தலைநகரான மும்பையில் இருந்து சுமார் 104 கி.மீ தொலைவில் உள்ள பல்கர் என்ற மாவட்டத்தில் இன்று காலை 2.50 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் 3.5 என்ற அளவில் பதிவாகியிருந்ததாகவும், பூமிக்கு அடியில் 5 கி.மீ ஆழத்தின் இதன் மையம் அமைந்திருந்ததாகவும் இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலஅதிர்வை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளுக்கு வந்தனர். இந்த நிலநடுக்கம் காரணமாக எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை என மராட்டிய மாநில அரசு தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com