மராட்டிய மேலவை காங்கிரஸ் பெண் உறுப்பினரை பின்னால் இருந்து தாக்கிய மர்ம நபர்

மராட்டிய மேலவையில் பெண் உறுப்பினராக உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதன்யா சதாவை பின்னால் இருந்து மர்ம நபர் ஒருவர் திடீரென தாக்கி உள்ளார்.
மராட்டிய மேலவை காங்கிரஸ் பெண் உறுப்பினரை பின்னால் இருந்து தாக்கிய மர்ம நபர்
Published on

புனே,

மராட்டியத்தில் மறைந்த காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சதாவ் என்பவரின் மனைவி பிரதன்யா சதாவ். இவரை மர்ம நபர் ஒருவர் திடீரென கடுமையாக தாக்கி உள்ளார். மராட்டியத்தின் ஹிங்கோலி பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க நபர் இந்த தாக்குதலில் ஈடுபட்டு உள்ளார்.

இதுபற்றி டுவிட்டரில் பிரதன்யா வெளியிட்ட செய்தியில், கஸ்பே தவண்டா நகரில் காலம்னுரி கிராமத்தில் நான் கடுமையாக தாக்கப்பட்டேன். பின்னால் இருந்து மர்ம நபர் என்னை தாக்கினார்.

என்னை காயப்படுத்தும் நோக்கில் நடந்த தீவிர முயற்சி அது. எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. சட்டசபையின் மேலவை பெண் உறுப்பினர் மீது நடந்த இந்த தாக்குதல் ஜனநாயகத்தின் மீது நடந்த தாக்குதல். முன்னால் வந்து போரிடுங்கள். கோழையாக இருக்காதீர்கள் என தெரிவித்து உள்ளார்.

போலீசிலும் அவர் புகார் அளித்து உள்ளார். சமூக ஊடகத்திலும் சம்பவம் பற்றி பகிர்ந்து உள்ளார். அவர் பல்வேறு கிராமங்களுக்கு, மக்களின் குறைகளை கேட்க சென்ற இடத்தில் இந்த தாக்குதல் நடந்து உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com