பழைய குற்றச்சாட்டுகளை கொண்டு புதிய கதை எழுத்தப்பட்டு இருக்கிறது - பினராயி விஜயன்

சட்டத்தை தனக்கு எதிரான அரசி யல் ஆயுதமாக பயன்படுத்துவதாக அமலாக்கத் துறையை குற்றம்சாட்டி உள்ளார்.

பழைய குற்றச்சாட்டுகளை கொண்டு புதிய கதை எழுத்தப்பட்டு இருக்கிறது
பினராயி விஜயன்
Published on

திருவனந்தபுரம்

பழைய குற்றச்சாட்டுகளை கொண்டு புதிய கதை எழுத்தப்பட்டு இருக்கிறது என அமலாக்கத்துறை மீது பினராயி விஜயன் சாடி உள்ளார்.

கொச்சின் மினரல்ஸ் நிறுவனத்திடம் ரூ.2.78 கோடி லஞ்சம் பெற்றதாக கூறி, கேரள முன் னாள் முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவ டிக்கை எடுக்க மாநில போலீசாருக்கு அமலாக் கத்துறை சமீபத்தில் கடிதம் அனுப்பியது.

இந்த விவகாரத்தை கடுமையாக சாடியுள்ள பின ராயி விஜயன், சட்டத்தை தனக்கு எதிரான அரசி யல் ஆயுதமாக பயன்படுத்துவதாக அமலாக்கத் துறையை குற்றம்சாட்டி உள்ளார். தன் மீதான பழைய குற்றச்சாட்டுகளை கொண்டு புதிய கதை எழுதப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

அவர் கூறுகையில், 'ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, கொச்சின் மிரனல்ஸ் நிறுவனத் துக்கு எந்தவித முறையற்ற சலுகையும் வழங்கப்படவில்லை. அப்படி ஒரு சலுகை வழங்கப்பட்டது என்பதை நிரூபிக்கும் எந்த ஆவணமும் இன்று வரை எங்கும் சமர்ப்பிக்கப்படவில்லை' என்று ஆவேசமாக கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com