மற்றொரு வாலிபருடன் நெருக்கம் காட்டிய கள்ளக்காதலி.. முதியவர் செய்த வெறிச்செயல்


மற்றொரு வாலிபருடன் நெருக்கம் காட்டிய கள்ளக்காதலி.. முதியவர் செய்த வெறிச்செயல்
x

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த முதியவரை கைது செய்தனர்.

பாகல்கோட்டை,

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி தாலுகா ஹிரேபதாசலகி கிராமத்தை சேர்ந்தவர் எமனவ்வா (40). இவா் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் எமனவ்வாவுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த ஸ்ரீசைலா பட்டீல் (67) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்த நிலையில் எமனவ்வா, ஸ்ரீசைலா பட்டீலுடனான பழக்கத்தை துண்டித்துள்ளார். மேலும் எமனவ்வாவுக்கும், 27 வயது வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த ஸ்ரீசைலா பட்டீல், எமனவ்வாவுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி ஸ்ரீசைலா பட்டீலின் தோட்டத்து வீட்டுக்கு எமனவ்வா வந்துள்ளார். அப்போதும் அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் ஸ்ரீசைலா பட்டீல், எமனவ்வாவின் கழுத்தை பிடித்து நெரித்துள்ளார். இதில் எமனவ்வா மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீசைலா பட்டீல், எமனவ்வா மாரடைப்பால் இறந்ததாக கிராம மக்களிடம் கூறி கதறி அழுது நாடகமாடி உள்ளார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஜமகண்டி போலீசார், எமனவ்வாவின் உடலை கைப்பற்றி பிரேத பாிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில், எமனவ்வா மாரடைப்பால் இறக்கவில்லை என்றும், கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதனால் ஜமகண்டி போலீசார், ஸ்ரீசைலா பட்டீலை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், எமனவ்வாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ஸ்ரீசைலா பட்டீலை கைது செய்தனர்.

1 More update

Next Story