மின்கம்பத்தில் சரசரவென ஏறிய மலைப்பாம்பு - லாவகமாக பிடித்து இறக்கிய இளைஞர்

கொச்சியில் சாலையோர மின்கம்பத்தில் ஏறிய மலைப்பாம்பை இளைஞர் ஒருவர் பாதுகாப்பாக பிடித்து கீழே இறக்கினார்.
மின்கம்பத்தில் சரசரவென ஏறிய மலைப்பாம்பு - லாவகமாக பிடித்து இறக்கிய இளைஞர்
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கொச்சியில் சாலையோர மின்கம்பத்தில் ஏறிய மலைப்பாம்பை பிடித்து கீழே இறக்கிய இளைஞருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். கொச்சி நகரில் உள்ள சாலையோர மின்கம்பத்தில் மலைப்பாம்பு ஏறியுள்ளது. உச்சிக்கு சென்ற பாம்பு, கம்பியை சுற்றி இருந்துள்ளது.

இதனை பொதுமக்கள் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த ஷமீர் என்ற இளைஞர் மலைப்பாம்பை பிடித்து கீழே இறக்க முன்வந்தார். இதையடுத்து மின்தடை செய்யப்பட்டு, மின்கம்பத்தின் மீது ஷமீர் ஏறி மலைப்பாம்பை லாவகமாக பிடித்து கீழே இறக்கி கொண்டு வந்தார். இளைஞரின் சாகச செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com