ரூ.200 கூப்பனுக்கு ரூ.50 லட்சம் கார்! 6 வயது சிறுவனுக்கு அடித்த மெகா ஜாக்பாட்!

மேதான்ஷ் ராய்க்வாருக்கு முதல் பரிசான ரூ.50 லட்சம் மதிப்புள்ள டொயோட்டா பார்ச்சூனர் கார் கிடைத்தது.
ரூ.200 கூப்பனுக்கு ரூ.50 லட்சம் கார்! 6 வயது சிறுவனுக்கு அடித்த மெகா ஜாக்பாட்!
மேதான்ஷ் ராய்க்வா
Published on: 

போபால்,

மத்திய பிரதேசத்தில் வெறும் 200 ரூபாய் குலுக்கல் கூப்பனில், 6 வயது சிறுவன் ஒருவன் ரூ.50 லட்சம் மதிப்புள்ள டொயோட்டா பார்ச்சூனர் காரை பரிசாக வென்றுள்ள வினோத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாட்டியின் பாசம்; பேரனுக்கு அதிர்ஷ்டம்

மத்திய பிரதேச மாநிலம் பர்ஹான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மேதான்ஷ் ராய்க்வார் (வயது 6). இந்த சிறுவனின் பாட்டி கிரண் ராய்க்வார், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற 'கர்பா' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அங்கு நடத்தப்பட்ட அதிர்ஷ்ட குலுக்கலுக்காக, வெறும் 200 ரூபாய் செலுத்தி தனது பேரனின் பெயரில் ஒரு கூப்பனை வாங்கியுள்ளார்.

நனவான குடும்பத்தின் கனவு

அதிர்ஷ்டக் குலுக்கலில் முதல் பரிசாக, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டொயோட்டா பார்ச்சூனர் கார் அவர்களுக்குக் கிடைத்தது. இந்த நிலையில், ஓராண்டுக்கு பிறகு அந்த குலுக்கல் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டன. இதில் லட்சக்கணக்கான கூப்பன்களில் இருந்து, சிறுவன் மேதான்ஷின் கூப்பன் எண் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவனுக்கு முதல் பரிசான ரூ.50 லட்சம் மதிப்புள்ள டொயோட்டா பார்ச்சூனர் கார் கிடைத்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக எப்படியாவது ஒரு கார் வாங்கிவிட வேண்டும் என்று ஏங்கி தவித்த அந்த நடுத்தர குடும்பத்திற்கு, இந்த செய்தி மகிழச்சி அளித்துள்ளது.

மேளதாளத்துடன் வந்த கார்

இதையடுத்து, விழா குழுவினர் புத்தம் புதிய பார்ச்சூனர் காரை ஓட்டிக்கொண்டு, மேளதாளங்கள் முழங்க, பட்டாசு வெடித்து சிறுவனின் வீட்டிற்கு சென்றனர். அங்கு சிறுவனுக்கும் அவனது குடும்பத்தினருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு கார் சாவி முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

வெறும் 200 ரூபாயில் நடுத்தர குடும்பத்தின் நீண்ட நாள் கனவை நனவாக்கிய இந்த 6 வயது சிறுவனின் அதிர்ஷ்ட வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com