கும்பமேளாவில் தனது மொபைலை நீரில் முக்கி புனித நீராட்டிய விசித்திர மனிதர்

மகா கும்பமேளாவிற்கு இதுவரை 54 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடியுள்ளனர்.
கும்பமேளாவில் தனது மொபைலை நீரில் முக்கி புனித நீராட்டிய விசித்திர மனிதர்
Published on

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.

இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

இந்த கும்பமேளாவிற்கு இதுவரை 54 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர் என உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கும்பமேளாவில் தனது மொபைலை நீரில் முக்கி புனித நீராட்டிய விசித்திர மனிதரின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பங்கேற்க, தொடர்ந்து பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com