பள்ளியில் பாய் விரித்து படுத்து உறங்கிய ஆசிரியை...வைரலான வீடியோவால் சஸ்பெண்ட்


பள்ளியில் பாய் விரித்து படுத்து உறங்கிய ஆசிரியை...வைரலான வீடியோவால் சஸ்பெண்ட்
x
தினத்தந்தி 29 July 2024 12:50 PM IST (Updated: 29 July 2024 5:10 PM IST)
t-max-icont-min-icon

பாய் விரித்து படுத்து உறங்கிய ஆசிரியைக்கு பள்ளி மாணவிகள் விசிறியால் வீசி விட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம், அலிகார் மாவட்டம் தானிபூர் பகுதியில் உள்ள கோகுல்பூரில் அரசு ஆரம்பப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் ஆசிரியை ஒருவர் பாடம் நடத்தாமல் தரையில் பாய் விரித்து படுத்துறங்குகிறார். அவரை சுற்றி மூன்று மாணவிகள் விசிறியால் வீசி விடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அத்துடன் அந்த ஆசிரியைக்கு எதிரான கண்டனங்களும் வலுத்து வருகிறது.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து பள்ளி ஆசிரியை டிம்பிள் பன்சால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் ராகேஷ்குமார் சிங் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story