கையில் துப்பாக்கியுடன் இளம்பெண் நடுரோட்டில் ஆட்டம்... வைரலான வீடியோ

உத்தர பிரதேசத்தில், நடுரோட்டில் கையில் துப்பாக்கியுடன் இளம்பெண் நடனம் ஆடி சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோவை வழக்கறிஞர் கல்யாண்ஜி சவுத்ரி பகிர்ந்துள்ளார்.
கையில் துப்பாக்கியுடன் இளம்பெண் நடுரோட்டில் ஆட்டம்... வைரலான வீடியோ
Published on

லக்னோ,

உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் உள்ள நெடுஞ்சாலையில் சிம்ரன் யாதவ் என்ற இளம்பெண் போஜ்புரி பட பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடினார். இன்ஸ்டாகிராமில் பிரபல நபரான அவர், தன்னை லக்னோவின் ராணி என குறிப்பிடுகிறார். இவரை 20 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.

இந்நிலையில், நடுரோட்டில் கையில் துப்பாக்கியுடன் பாட்டுக்கு அவர் நடனம் ஆடியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபற்றி வழக்கறிஞர் கல்யாண்ஜி சவுத்ரி என்பவர் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ 22 வினாடிகள் ஓடுகிறது. அதன் தலைப்பில், சிம்ரன் விதிகளை காற்றில் பறக்க விட்டு விட்டார்.

துப்பாக்கியுடன் நெடுஞ்சாலையில் வீடியோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார் என கல்யாண்ஜி பதிவிட்டு உள்ளார். இதனை தொடர்ந்து, உத்தர பிரதேச போலீசார், இந்த விவகாரம் பற்றி விசாரிக்கவும் என லக்னோ போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

இதற்கு லக்னோ போலீசார், தேவையான நடவடிக்கை எடுக்கும்படி தொடர்புடையவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளனர்.

இதுபோன்ற ஜோக்கர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என ஒருவரும், இன்ஸ்டாகிராமில் இருந்து இதுபோன்ற கணக்குகள் நீக்கப்பட வேண்டும் என மற்றொருவரும் தெரிவித்து இருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com