முண்டகோடு அருகே கத்தியால் குத்தி வாலிபர் படுகொலை

முண்டகோடு அருகே கத்தியால் குத்தி வாலிபர் படுகொலை செய்யப்பபட்டார்.
முண்டகோடு அருகே கத்தியால் குத்தி வாலிபர் படுகொலை
Published on

உத்தரகன்னடா-

உத்தரகன்னடா மாவட்டம் முண்டகோடு தாலுகாவில் திபெத்திய முகாம் உள்ளது. இந்த முகாமில் லோக்சங் (வயது35) மற்றும் சோடாக் (50) ஆகியோர் தங்கி இருந்தனர். சோடாக் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த சோடாக் அருகில் கிடந்த கத்தியை எடுத்து லோக்சங்கை குத்தியுள்ளார். லோக்சங் மற்றொரு கத்தியை எடுத்த சோடாக்கை குத்தியுள்ளார். இதில் லோக்சங் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

படுகாயம் அடைந்த சோடாக்கை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த முண்டகோடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் லோக்சங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முண்டகோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com