பரதநாட்டியம் ஆடிய பெண்ணுக்கு ஆசி வழங்கிய கோவில் யானை

தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு அருகே கட்டீல் துர்கா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.
பரதநாட்டியம் ஆடிய பெண்ணுக்கு ஆசி வழங்கிய கோவில் யானை
Published on

மங்களூரு, 

தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு அருகே கட்டீல் துர்கா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கிரிஜா என்ற 31 வயது பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவில் யானை முன்பு இளம்பெண் ஒருவர் பரதநாட்டியம் ஆடினார். அப்போது அவருக்கு கோவில் யானை ஆசி வழங்கியதுடன், இளம்பெண்ணுடன் சேர்ந்து தும்பிக்கையை தூக்கி வணக்கம் செலுத்தியபடி நடனமாடியது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் யானையின் செயலால் வியந்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மகிந்திரா குழு தலைவர் ஆனந்த் மகிந்திரா, கட்டீல் கோவில் யானை நம்மை பிரமிக்க வைக்கிறது. இந்த யானை தும்பிக்கையை தூக்கி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து சொல்கிறது என குறிப்பிட்டுள்ளார். இந்த கோவில் யானை கால்பந்து ஆடிய வீடியோ சமீபத்தில் வெளியாகி ஏகோபித்த வரவேற்பை பெற்றது நினைவுகூரத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com