ஆந்திர பிரதேசத்தில் 200 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து; 4 பேர் உயிரிழப்பு

ஆந்திர பிரதேசத்தில் சுற்றுலா பேருந்து ஒன்று 200 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
ஆந்திர பிரதேசத்தில் 200 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து; 4 பேர் உயிரிழப்பு
Published on

ஐதராபாத்,

ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து ஒன்று 200 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் திடீரென கவிழ்ந்தது.

இதில் பேருந்தில் பயணித்த 18 பேரில் 4 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஐதராபாத்தில் இருந்து பயணிகள் அரக்கு பள்ளத்தாக்கு நோக்கி சென்று கொண்டிருந்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார், ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகளுடன் சம்பவ பகுதிக்கு சென்றனர். ஆந்திர பிரதேச ஆளுநர் பிஸ்வா பூசண் ஹரிசந்தன் அதிர்ச்சியும், வருத்தமும் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com