அருவி உச்சியில் இருந்து 60 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்...பதைபதைக்க வைக்கும் காட்சி

அருவி உச்சிக்கு சென்ற இளைஞர் 60 அடி ஆழத்தில் விழுந்து படுகாயமடைந்தார்.
சத்தீஷ்கார் ,
சத்தீஷ்கார் மாநிலத்தில் அருவியின் உச்சியில் ஏறிய இளைஞர் 60 அடி ஆழத்தில் விழுந்து படுகாயமடைந்த சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தஸ்குடா அருவி, எப்போதும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழியும் புகழ்பெற்ற அருவிகளுள் ஒன்று. அந்த அருவியில் குளிக்க ஆர்வமாக சென்றார் இளைஞர் ஒருவர்.
ஆர்வத்தின் உச்சத்தில் அருவியின் உச்சிக்கு சென்ற அவர், கண்ணிமைக்கும் நொடியில் கால் வழுக்கி அருவி நீர் விழும் வேகத்திலேயே 60 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தார்.
இதில் படுகாயமடைந்த இளைஞர் அருவி வெள்ளத்திற்கு மத்தியில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
Related Tags :
Next Story






