

மும்பை
மும்பை விமான நிலையத்தில் இன்று காலை ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று புறப்பட தயாராகிக்கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக வாகன நிறுத்துமிடத்தில் தரையில் மோதிக்கொண்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.