பிறந்தநாள் விழாவிற்கு சென்ற பெண்.. போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை- 3 பேர் கைது

பிறந்தநாள் விழாவிற்கு சென்ற பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பிறந்தநாள் விழாவிற்கு சென்ற பெண்.. போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை- 3 பேர் கைது
Published on

மும்பை,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த 22 வயதான இளம்பெண் ஒருவர், தனது தோழியின் பிறந்தநாள் விழாவிற்கு சென்றுள்ளார். பத்லாபூரின் ஷிர்கான் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவிற்கு இளம்பெண் சென்றுள்ளார்.

பிறந்தநாள் விழாவில் அனைவரும் மது அருந்திக்கொண்டு கும்மாளம் போட்டுக்கொண்டிருந்தனர். அங்குள்ள சூழல் பிடிக்காததால் அந்த இளம்பெண் தனது வீட்டிற்கு செல்ல முயன்றுள்ளார். அப்போது இளம்பெண்ணின் தோழி, போதைப்பொருள் கலந்த குளிர்பானத்தை அவருக்கு கொடுத்துள்ளார். சாதாரண குளிர்பானம் என நம்பி அந்த இளம்பெண்ணும் அதனை வாங்கி குடித்துள்ளார்.

குளிர்பானத்தை குடித்த சிறிது நேரத்தில் இளம்பெண்ணுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த நபர் ஒருவர், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன் தினம் இரவு நடைபெற்றுள்ளது. தான் பாதிக்கப்பட்டதை அறிந்த இளம்பெண், அங்கிருந்த தப்பித்து, போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இளம்பெண்ணின் தோழி மற்றும் இரண்டு வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com