தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

திருமணமானதை மறைத்த காதலன் தூக்குப்போட்டு இளம் பெண் தற்கொலை வாலிபரும் உயிரை மாய்த்து கொண்டார்.
தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
Published on

பெங்களூரு:-

பெங்களூரு புறநகர் விஜயாப்புரா டவுன் பகுதியில் வசித்து வருபவர் குருபிரசாத். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். அப்போது அவருக்கும், அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பவித்ரா என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் காதலித்து வந்தனர். மேலும் குருபிரசாத், தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறுத்து இருந்தார். இதற்கிடையே திருமண விவகாரம் குறித்து அவரது காதலிக்கு தெரியவந்தது. இதையடுத்து பவித்ரா, குருபிரசாத்திடம் இதுகுறித்து கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் பவித்ரா மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த பவித்ரா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குருபிரசாத்திற்கு தெரியவந்தது. இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் மிகவும் மனவேதனை அடைந்தார். காதலியின் தற்கொலைக்கு நான்தான் காரணம் என்ற குற்ற உணர்வு ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த குருபிரசாத், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கோலை செய்து கொண்டார். இந்த தற்கொலை சம்பவங்கள் குறித்து விஜயாப்புரா போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தது. சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்ற போலீசார் 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com